சாவகச்சேரி நகர சபையின் ‘பட்ஜட்’ ஏகமனதாக நிறைவேற்றம்!

யாழ்., தென்மராட்சி, சாவகச்சேரி நகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேறியது.

அடுத்த ஆண்டுக்கான பட்ஜட் கூட்டம் நகர சபைத் தலைவர் திருமதி சிவமங்கை இராமநாதன் தலைமையில் கூடியது.

18 உறுப்பினர்களைக் கொண்ட சாவகச்சேரி நகர சபையில் இன்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் தவிர்ந்த அனைவரும் சபைக்குப் பிரசன்னமாகியிருந்தனர்.

இதன்போது தலைவரால் வரவு – செலவுத்திட்டம் சபையில் முன்வைக்கப்பட்டு விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சபையில் பிரசன்னமாகி இருந்த அனைத்து உறுப்பினர்களின் ஏகமனதான ஆதரவோடு அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.