இலங்கை அடையாளத்துடன் கூடிய பிறப்புச் சான்றிதழ் வழங்கல்….

இலங்கையில் பிறக்கும் எந்தவொரு பிள்ளையும் பிறப்பின் போது பதிவு செய்து அப்பிள்ளைக்கு தேசிய பிறப்புச் சான்றிதழை வழங்கும் அதிகாரம் பிறப்பு மற்றும் இறப்பைப் பதிவு செய்யும் சட்டத்திற்கமைய பதிவாளர் நாயக திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

1968 ஆம் ஆண்டு 32 ஆம் இலக்க ஆட்களைப் பதிவு செய்யும் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய தேசிய ஆட்கள் பெயர்ப்பட்டியலை பேணுதல் மற்றும் 15 வயதை அடைந்தவர்கள் மற்றும் அடையவுள்ள இலங்கைப் பிரஜைகளின் விண்ணப்பத்திற்கமைய அவர்களைப் பதிவு செய்து தேசிய அடையாள அட்டையை வழங்குதல், ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதேபோல், 2006 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய வெளியிடப்பட்டுள்ள 2019 ஆம் ஆண்டு 01 ஆம் இலக்க இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் (இலங்கை அடையாள இலக்க) கட்டளையின் பிரகாரம் அனைத்து இலங்கைப் பிரஜைகளுக்கும் இலங்கை அடையாள இலக்கத்தை வழங்குவதற்காகவும் ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஒரே அடையாள இலக்கத்தைப் பயன்படுத்துவதன் மூலம் பிறப்பிலிருந்து இறப்பு வரைக்கும் மேற்கொள்ளும் செயற்பாடுகளின் போது குறித்த நடவடிக்கைகளை இலகுவாகவும் வினைத்திறனாகவும் மேற்கொள்வதற்கு இலங்கையர்களுக்கு வருங்காலங்களில் வாய்ப்புக் கிடைக்கும்.

அதற்கமைய, ஆட்பதிவுத் திணைக்களத்தின் தகவல் தொகுதி மூலம் இணையவழியூடான இலங்கை அடையாள இலக்கத்தை பதிவாளர் நாயகத் திணைக்களத்திற்கு வெளியிடுவதற்கும், குறித்த இலக்கத்தை உள்ளடக்கி பதிவாளர் நாயகத் திணைக்களத்தின் மூலம் குறித்த நபர்களின் பிறப்புச் சான்றிதழை வழங்குவதற்கும் பாதுகாப்பு அமைச்சராக மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.