ஒரேநாளில் மோதும் சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி திரைப்படங்கள்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படமும், விஜய் சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டான் திரைப்படம் பெப்ரவரி 18 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படமும் வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆகவே இந்த இரண்டு திரைப்படங்களும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.