“அண்ணனுக்கு ஜே!”.. கூட்டணியில் ஜெயித்த போட்டியாளர்.. மாலை அணிவித்து கொண்டாடிய ஹவுஸ்மேட்ஸ்!

பிக்பாஸ் வீட்டில் அண்மைக் காலமாக நடந்த அரசியல் கட்சிகள் தொடர்பான லக்ஜூரி பட்ஜெட் டாஸ்க்கில் பெரும் அரசியல் களேபரங்கள் வெடித்து தற்போது இந்த டாஸ்க் முடிவுக்கு வந்துள்ளது.

பிக்பாஸ் வீட்டில் பல்வேறு விதமான டாஸ்க் சுவாரசியமாகவும் நடைமுறை வாழ்க்கையுடன் பொருந்திய விஷயங்களாகவும் நடைபெற்று வந்தன. சில டாஸ்க்குகள் ரியாலிட்டி ஷோ போன்று கட்டமைக்கப்பட்டு இருந்தாலும், சில வித்தியாசமான டாஸ்குகள் மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் விஷயங்களிலிருந்து உருவாக்கப்பட்டிருந்தன.

உதாரணமாக பால் பண்ணையில் பால் சேகரிக்கும் செண்பகமே செண்பகமே டாஸ்க் மற்றும் பள்ளி காலங்களை நினைவு படுத்தும் கனா காணும் காலங்கள் டாஸ்க் உள்ளிட்டவை அனைத்தும், மக்கள் அனைவராலும் அன்றாடம் சந்திக்கக்கூடிய விஷயங்களின் அனுபவங்களை உள்ளடக்கியதாக விளங்கின.

இதேபோல் திரைப்பட நடிகர்களைப் போன்று போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் வேடமிட்ட ஒரு டாஸ்க்கும் நடைபெற்றது. இதில் நாம் பார்த்த பல நடிகர்களை போட்டியாளர்கள் இமிடேட் செய்து அவர்களை தத்ரூபமாக போட்டியாளர்கள் நடிப்பில் கொண்டுவந்தனர். குறிப்பிட்ட நடிகர்களின் பாடி லாங்குவேஜ், செயல்பாடுகள், ஆடைகள் உள்ளிட்டவற்றையும் பிரதிபலித்தனர்.

இந்த வரிசையில் அரசியல் கட்சிகள் தொடங்கும் டாஸ்க் அடுத்து நடைபெற்றது. இதில் மொத்தம் பிக்பாஸ் போட்டியாளர்கள் மூன்று அணிகளாக பிரிந்து 3 கட்சிகளை தொடங்க வேண்டும் என்று பிக்பாஸ் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மூன்று அணிகளாக பிரிந்து போட்டியாளர்கள் முறையே பிரியங்கா, சிபி மற்றும் சஞ்சீவ் ஆகியோரை தலைவர்களாகக் கொண்ட 3 புதிய கட்சிகளை உருவாக்கினர்.

இந்த மூன்று கட்சிகளுக்கும் மக்கள் கட்சி, உரக்கச் சொல் கட்சி மற்றும் என்பிபி கட்சி என்று பெயர் வைக்கப்பட்டு இருந்தன. இதனிடையே அனைத்து டாஸ்குகளிலும் வருவதுபோல இந்த டாஸ்கிலும் போட்டியாளர்களிடையேயான சண்டை எழுந்தது. அதன்படி தாமரை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையான சண்டை அதிகரித்தது.

இதேபோல் பாவனி மற்றும் அபினய் இருவரிடையேயான நட்புறவு குறித்து ராஜூ மற்றும் சிபி பேசிய கருத்துக்கள் பேசுபொருளாக மாறின. ஒரு வழியாக அனைத்து பிரச்சினைகளையும் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டதால் முடிவுக்கு வந்தது. ஆம், தாமரையிடம் பிரியங்கா சென்று கட்டிப்பிடித்து சமாதானம் பேசினார். இதேபோல், பாவனியும் தானாகவே சென்று ராஜூ, சிபி, அபினய் அனைவரையும் கட்டிப்பிடித்து சமாதானம் ஆனார்.

இதனை அடுத்து சஞ்சீவ் தலைமையிலான என்பிபி கட்சியும் சிபி தலைமையிலான மக்கள் குரல் கட்சியும் கூட்டணி அமைத்து, என்பிஎம்கே என புதிய கட்சி உருவானது. இந்த கூட்டணி கட்சிக்கு பின், பிக்பாஸ் வீட்டில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்த தேர்தலி, கூட்டணிக் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, தலைவர் பதவிக்கு ஒருவரை தேர்ந்தெடுக்கச் சொல்லி பிக்பாஸ் கேட்க, அனைத்து கூட்டணி கட்சியில் இருந்த வருண், சிபி, ராஜூ, நிரூப், அக்‌ஷரா, தாமரை, சஞ்சீவ் என அனைத்து போட்டியாளர்களும் மூத்தவரான இமான் அண்ணாச்சியை ஏகமனதாக, தேர்ந்தெடுக்க இமான் வெற்றி பெற்ற இந்த கட்சியின் சார்பில் தலைவர் பதவியை ஏற்றார்.

இதனைத்தொடர்ந்து மற்ற போட்டியாளர்கள் அவருக்கு சால்வை போற்றி, மாலை அணிவித்து மரியாதை செய்து, தூக்கி, ஆடிப்பாடி கொண்டாடினர். குறிப்பாக ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ பாடலை போட்டியாளர்கள் பாடினர். அக்‌ஷரா, ‘அண்ணாச்சி வாழ்க!’ என்று கோஷமிட்டார்.

வெற்றி பெறாத தனிக்கட்சியாக ‘உரக்கச் சொல்’ கட்சியின் தலைவர் பிரியங்கா மற்றும் அந்த கட்சியை சேர்ந்தவர்களான அமீர், அபினய், பாவனி, அனைவரின் முன்னிலையிலும் அண்ணாச்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து இந்த லக்ஜூரி பட்ஜெட் டாஸ்க் முடிவுக்கு வந்ததாக பிக்பாஸ் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.