முல்லை நகர் சுற்றுவளையத்தில் பாலன்குடில் திறந்து வைப்பு!

கிறிஸ்து பிறப்பை முன்னறிவிக்கும் முகமாக முல்லைத்தீவு நகரின் சுற்றுவளையத்தில் அமைக்கப்பட்ட பாலன்குடில் சிறிய வழிபாட்டுடன் மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு முல்லைத்தீவு பங்குதந்தை அகஸ்ரின் அடிகளார் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரதேச சபையின் அனுமதியுடன் குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்ட நிலையில் பிரதேச சபையினர் மற்றும் இராணுவத்தினருக்கு பங்குத்தந்தை இதன்போது நன்றி தெரிவித்தார்.

முல்லைத்தீவு பங்குத் தந்தை அகஸ்ரின் அவர்களின் நேரடி நெறிப்படுத்தலிலும் முல்லைப் பங்கு இளைஞர்களின் ஆற்றுகையுடன் வட்டுவாகல் இராணுவத்தின் அழகுபடுத்தலில் குறித்த பாலன்குடில் அமைக்கப்பட்டது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

குறித்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் விஜிந்தன், உப தவிசாளர் பூலோகம், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் மக்கள் ஆகிய பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.