ஆஷஸ் தொடர்: இரண்டாவது போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு.

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் பகலிரவு போட்டியாக நடைபெறுகிறது.

மேலும் முதல் டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்த ஜோஷ் ஹசில்வுட், டேவிட் வார்னர் ஆகியோர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பார்களா என்ற கேள்வியும் வழுத்து வந்தது.

இந்நிலையில் இதற்கு விடையளிக்கும் வகையில் ஆஸ்திரேலிய அணி தங்களது பிளேயிங் லெவனை இன்று அறிவித்துள்ளது. அதன்படி ஜோஷ் ஹசில்வுட்டிற்கு பதிலாக ஜெய் ரிச்சர்ட்சன் ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும் டேவிட் வார்னர் காயத்திலிருந்து குணமடைந்து பிளேயிங் லெவனில் இடம்பிடித்துள்ளார். ஏற்கெனவே முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலை வகிப்பதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஆஸ்திரேலிய அணி: மார்கஸ் ஹாரிஸ், டேவிட் வார்னர், மார்னஸ் லபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி , பாட் கம்மின்ஸ் (கே), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஜெய் ரிச்சர்ட்சன்.

Leave A Reply

Your email address will not be published.