பயிர் செய்ய முடியாத அனைத்து வயல் நிலங்களிலும் தென்னைச் செய்கை…

பயிர் செய்ய முடியாத அனைத்து வயல் நிலங்களிலும் தென்னைச் செய்கைக்கு அனுமதி வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழல் அமைச்சில் நேற்று நடைபெற்ற காலநிலை மாற்றத்திற்கான பசுமை சமூக பொருளாதார தீர்வுகளுக்கான ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

இது தொடர்பான சுற்றறிக்கையும் மற்றும் ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் தலா 500,000 ரூபாய் வழங்கி தென்னை நாற்றுப் பண்ணைகளை ஆரம்பிப்பது தொடர்பான சுற்றறிக்கையும் விரைவில் வெளியிடப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது தென்னை மரக்கன்றுகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சிடம் மாத்திரம் இதன் பொறுப்பை ஒப்படைக்காமல், அனைத்து அமைச்சுக்களும் தமக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியைப் பயன்படுத்தி இந்தத் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நிதி அமைச்சரினால் கோரிக்கை விடப்பட்டுள்ளதாக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.