ரத்தாகிறதா இந்தியா – தென் ஆப்பிரிக்க தொடர்.

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் வரும் 26ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர்.
இதுவரை, தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றது இல்லை. இதனால் இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஓமைக்கரான் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் இருப்பதால், இந்த தொடருக்கு பல முன்எச்சரிக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் தினசரி கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்தை தாண்டி வருகிறது. இதனால் முதல் டெஸ்ட் போட்டியை நேரில் காண பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வீரர்களின் பாதுகாப்புக்காக தீவிர பயோ பபுள் விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
விமான நிலையங்களுக்கு செல்வதை தடுக்கும் வகையில் வீரர்களை சாலை மார்க்கமாக அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீரர்களுக்கு என்று பிரத்யேக ஹோட்டல்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், உலகம் முழுவதும் ஒமைக்கரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் அதன் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், பிசிசிஐ, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்திற்கு தகவல் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் கரோனா வைரஸ் பரவல் மிகவும் அதிகமாக இருந்தாலோ, வீரர்களுக்கு தொற்று ஏற்பட்டாலோ தொடரை உடனடியாக நிறுத்திவிட்டு இந்திய அணி நாடு திரும்பிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் இந்த முடிவிற்கு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் ஒப்புகொண்டுள்ளது. இதனால் தொடர் நடைபெறும் போது, கரோனா வைரஸ் பரவல் கையை மீறவே வாய்ப்புள்ளதால், தொடர் பாதியில் நிறுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

அப்படி நிறுத்தப்பட்டால் , எஞ்சிய போட்டிகள் இங்கிலாந்த தொடர் போல் அடுத்த ஆண்டுக்கு நடத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.