ஓமைக்ரான் பரவல்: 4 பேர் அடங்கிய மத்திய குழு தமிழகம் வருகை

தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக 4 போ் கொண்ட மத்திய மருத்துவ குழுவினா் டெல்லியிலிருந்து விமானம் மூலம் தமிழகம் வந்தடைந்தனர்.

ஓமைக்ரான் வகை வைரஸ் தொற்று இந்தியாவில் வேகமாக பரவிவருகிறது. தற்போதுவரை 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 420க்கும் மேற்பட்டோருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், உத்தரப் பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் ஓமைக்ரான் காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உள்ள கேரளா, மகாராஷ்டிரா,தமிழ்நாடு, மேற்கு வங்கம், மிசோரம், கர்நாடகா, பீகார், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், பஞ்சாப் ஆகிய 10 மாநிலங்களுக்கு மத்திய குழுவை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, ஓமைக்ரான் பாதிப்புகள் குறித்தும், பரவல் குறித்தும் ஆய்வு செய்வதற்காக மத்திய மருத்துவ குழு வல்லுநர்கள் டாக்டர் வனிதா,புர்பசா,சந்தோஷ் குமார்,தினேஷ் பாபு ஆகிய நான்கு போ் கொண்ட மத்திய மருத்துவ குழுவினா் டெல்லியிலிருந்து விமான மூலம் சென்னை வந்துள்ளார்.

இவா்கள் தமிழ்நாட்டில் ஐந்து நாட்கள் தங்கியிருந்து ஆய்வுகள் நடத்தவுள்ளனர். பின்னர், ஆய்வின் முடிவுகளை மத்திய சுகாதாரத்துறையிடம் இந்த குழு அளிக்கும்.

Leave A Reply

Your email address will not be published.