பொலிஸ் விசேட அதிரடிப் படையின் சுற்றிவளைப்புகளில் அறுவர் கைது!

பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்புகளில் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் இன்று தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக இரண்டு மதுபான சுற்றிவளைப்புகளில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 22.5 லீற்றர் மதுபானம், 135 லீற்றர் கோடா, ஒரு செப்புத் தகடு என்பவையும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கம்பஹா, ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டுவத்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 26 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வல்பொல, ராகம பிரதேசத்தைச் சேர்ந்த நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொலன்னாவ பிரதேசத்தில், 5 கிராம் 150 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 50 கிராம் 220 மில்லிகிராம் கேரள கஞ்சா மற்றும் 15 ஆயிரத்து 400 ரூபா பணத்துடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொலன்னாவைப் பிரதேசத்தை சேர்ந்த நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, மட்டக்குளிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேர்கியூசன் வீதி பிரதேசத்தில் தீர்வை வரியின்றி இந்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட புகைத்தல் பொருட்களுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது 3 ஆயிரத்து 420 புகைத்தல் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மஹியங்கனை, கொழும்பு 15 ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி குற்றச்சாட்டுக்களின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள அறுவரும் பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.