ஈரானில் இருந்து ஏமனுக்கு சென்ற ஆயுதங்களை கைபற்றிய அமெரிக்க கடற்படை.

அமெரிக்க கடற்படையின் 5 ஆவது படையணி வடக்கு அரேபிய கடல் பகுதியில் ஈரானில் இருந்து ஏமன் நோக்கி சென்ற ஏராளமான ஆயுதங்களை கைபற்றி உள்ளது.

அமெரிக்க கடற்படையின் ரோந்து கலன்களான டெம்பெஸ்ட் மற்றும் டைஃபூன் ஆகியவை ஏவுகணை நாசகாரி கப்பலான ஓ’கேன் உடன் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டன.

இந்த நடவடிக்கையில் ஏமனில் ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்காக கொண்டு செல்லப்பட்ட 1400 ஏகே-47 ரக துப்பாக்கிகள் மற்றும் 2 லட்சம் ரவுண்டு தோட்டாக்கள் ஆகியவை கைபற்றப்பட்டன.

இவற்றை கொண்டு சென்ற படகில் இருந்த ஐந்து பேரும் கைது செய்யப்பட்ட பின்னர் அவர்களின் படகை அமெரிக்க கடற்படையினர் மூழ்கடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.