மகிந்த திருப்பதி சென்ற விமானம் மகிந்தவுடையதா? புதிதாக எழுந்துள்ள சர்ச்சை! (வீடியோ)

பிரதமர் மகிந்த ராஜபக்ச திருப்பதிக்கு பயணம் மேற்கொண்ட தனியார் விமானம் குறைந்த சனத்தொகையை தீவான இத்தாலியின் சென் மெரினோ என்ற பகுதியில் பதிவுசெய்யப்பட்டிருப்பதாக முன்னிலை சோலிஷ கட்சியின் தேசிய அமைப்பாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.

சென் மெரினோ என்ற இடம் சட்ட விரோதமாக ஈட்டப்படும் கருப்பு பணத்தை சட்டபூர்மாக மாற்ற பயன்படுத்தப்படும் ஒரு இடமாக கருதப்படுகின்றது. எனவே இந்த விமானம் கருப்பு பணம் சம்பந்தப்பட்ட ஒருவரின் விமானமாக இருக்கலாம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாடு டொலர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமரின் இந்த செயற்பாட்டை கண்டிக்கத்தக்கது. இந்த விமானம் கடந்த 23ம் திகதி உகாண்டாவில் இருந்து இரத்மாலான விமான நிலையத்திற்கு வந்துள்ளது.

அத்துடன், இந்த விமான பயணத்திற்காக மணித்தியாலம் ஒன்றுக்கு 6,700 டொலர்கள் அறவிடப்படுகின்றன.

எனவே 24 மணித்தியாலங்கள் இந்த விமான சேவை பயன்படுத்தப்பட்டிருந்தால் சுமார் 32 மில்லியன் ரூபா விமான நிறுவனத்தினால் அறவிடப்பட்டிருக்கும்.

குறித்த விமானத்திற்கு நண்பர்களே அனுசரனை வழங்கியதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்த போதும் நாட்டின் தற்போதைய நிலையில் இவ்வளவு பாரிய தொகை டொலர்கள் வீணடிக்கப்பட்டமை கண்டிக்கதக்கது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.