பாலியல் பாதிரிகள் குறித்து புத்தகம் வெளியிட்ட கன்னியாஸ்திரி லூசி கலபுரா

கேரளா : பாலியல் குற்றம்சாட்டப்பட்ட பிஷப் பிரான்கோவுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கேரளா பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபையில் இருந்து வெளியேற்றப்பட்ட கன்னியாஸ்திரி லூசி கலபுரா என்பவர் தொடர்ந்து சிறுஸ்தவ வழிபாட்டு தளங்களில் நடைபெறும் பாலியல் கொடுமைகளை பற்றி “கர்தாவின்ட நாமத்தில்”(கிறிஸ்துவின் பெயரால்) என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார்.

அதில் கன்னியாஸ்திரிகள் பாதிரியார்களுடன் தவறான உறவுக்கு கட்டாயப்படுத்தப்படுவது, கிருஸ்தவ கல்விநிலையங்களில் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள், சர்ச்சுகளுக்கு வரும் பெண்கள் மிரட்டப்படுவது போன்று கிருஸ்தவ நிறுவனங்களில் நடைபெறும் பாலியல் குற்றங்களைப் பற்றி கிருஸ்தவ பெண்களின் மனக்குமுறலை கொட்டி தீர்த்துள்ளார்.

பாலியல் புகார்:

கேரளாவிலுள்ள சர்ச்சில் பணியாற்றிய, கிறிஸ்துவ பாதிரியார் பிராங்கோ முலக்கல் மீது, கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் பலாத்கார புகார் கூறினார். பாதிரியாரை கைது செய்ய வலியுறுத்தி, கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்ட கன்னியாஸ்திரி லுாசி கோலப்புரா மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு கன்னியாஸ்திரி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார். தொடர்ந்து அவர், ‘பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபை’யிலிருந்தும் நீக்கப்பட்டார். இதனையடுத்து போப்பிடம் தன் நிலையை விளக்க அனுமதி கேட்டு, லூசி கடிதம் அனுப்பினார்.

இந்நிலையில், லூசியின் வாழ்க்கை குறித்து, ‘கர்த்தாவின்டே நாமத்தில்’ என்ற தலைப்பில், பத்திரிக்கையாளர் ராமதாஸ் என்பவர் புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார். இது அடுத்த வாரம் வெளியாக உள்ள நிலையில், புத்தகத்தில் லூசி கடந்து வந்த வலிகள் அதில் விவரிக்கப்பட்டுள்ளது.
கர்ப்பம்:

புத்தகத்தில் கன்னியாஸ்திரி கூறியிருப்பதாவது: கேரளாவில் கன்னியாஸ்திரி மடத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகின்றன. பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகளை தங்களது ஆசைக்கு பணிய வைக்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன், கன்னியாஸ்திரி ஒருவர் பாதிரியார் ஒருவரால் கர்ப்பம் தரித்து குழந்தை பெற்றார். இச்சம்பவத்திற்கு கன்னியாஸ்திரியை மடத்திலிருந்து வெளியே அனுப்பினார்கள் , பாதிரியாரை சபை காப்பாற்றியது.

4 முறை முயற்சி:

நான் கன்னியாஸ்திரி ஆன பிறகு, பார்வையாளர் என்ற போர்வையில் மடத்திற்குள் நுழைந்த பாதிரியார்கள், 4 முறை என்னை பலாத்காரம் செய்ய முயற்சித்தனர். கண்ணூர் அருகே கொட்டியூரில் சிறுமி ஒருவரை ராபின் என்ற பாதிரியார் கர்ப்பமாக்கினார். அந்த பாதிரியாருக்கு, கேரளாவின் பல்வேறு மடங்களிலுள்ள கன்னியாஸ்திரிகளுக்கு தொடர்பு உள்ளது. என்னையும் அவர் வலையில் சிக்க வைக்க முயற்சித்தார். இவ்வாறு அவர் கூறியதாக புத்தகத்தில் பல திடுக்கிடும் சம்பங்கள் உள்ளன. புத்தகம் வெளியானால் அது மேலும் பரபரப்பை உண்டாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Leave A Reply

Your email address will not be published.