அப்பா அம்மாவுக்கு கோயில் கட்டிய பாசக்கார மகன்..

பொள்ளாச்சி அருகே தாய், தந்தை மீது அளவு கடந்த பாசத்தால் சிலை வைத்து கோவில் கட்டி கும்பாபிஷேக விழா நடத்தி ஊருக்கு விருந்து வைத்த இளைஞர்.

கோவை மாவட்டம் புலியகுளம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார். கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். சிறு வயதிலிருந்தே ரமேஷ் குமாருக்கு தனது தந்தை மாரிமுத்து, தாய் பாக்கியம் மீது அளவு கடந்த பாசம் இருந்து வந்துள்ளது. தனது தாய், தந்தை மீது வைத்த அளவுகடந்த பாசத்தினால், அவர்களது மறைவை தாங்க முடியாத ரமேஷ் குமார் பொள்ளாச்சி அடுத்த தீபாலபட்டி என்னும் கிராமத்தில் இரண்டு ஏக்கர் நிலத்தை வாங்கி கடந்த 2018 ஆம் ஆண்டு தனது தாய், தந்தையருக்கு கோவில் கட்டி அவர்களது சிலையை வைத்துள்ளார்.

அந்த சமயத்தில் கொரானோ ஊரடங்கு என்பதால் சிறிய அளவில் கும்பாபிஷேகம் செய்துள்ளார். இதனையடுத்து இரண்டாவது ஆண்டாக தனது தாயின் நினைவு நாளான கடந்த 19,ம் தேதி அன்று கும்பாபிஷேகம் நிகழ்வை மிகப்பிரமாண்டமாக நடத்தியுள்ளார் ரமேஷ்குமார் உறவினர்கள் 500க்கும் மேற்பட்டவர்களை அழைத்து விருந்து வைத்து அசத்தி உள்ளார்.

மேலும், கிராம மக்களுக்கு தாய், தந்தை நினைவாக நூற்றுக்கும் மேற்பட்டவர் களுக்கு வேஷ்டி, சேலைகள் கொடுத்தும், அனைவருக்கும் விருந்து அளித்துள்ளார் ரமேஷ்குமார். இவரது செயல்பாடு அந்த பகுதியில் உள்ள கிராமங்களில் காட்டுத்தீ போல் பரவியதை அடுத்து பல கிராமங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் இவரது தோட்டத்தில் கட்டியுள்ள இவரது தாய், தந்தையரின் கோவிலை பார்ப்பதற்காக தினந்தோறும் வந்து செல்கின்றனர்.

இன்றைய அறிவியல் யுகத்தில் தங்களுடைய தாய்,தந்தை உயிருடன் இருக்கும்போதே தங்களால் கவனிக்க முடியாமல் முதியோர் இல்லங்களில் சேர்த்துவிடும் இன்றைய சமுதாயத்தில், இறந்த பிறகும் அவர்கள் மீது பாசம் குறையாத ரமேஷ்குமார் போன்ற ஒரு சிலரால் மட்டுமே இன்றளவும் மனிதநேயம், அன்பு, பாசம் என்ற சொற்களுக்கு உயிரோட்டம் இருந்து வருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.