மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் ஒளிவிழா.

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தினால் ஒழுங்கு செய்து நடாத்தப்பட்ட ஒளிவிழா நிகழ்வானது களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நேற்று 2021.12.30ஆம் திகதி இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பெரியகல்லாறு புனித அருளானந்தர் தேவாலய பங்குத்தந்தை அருட்பணி ஜோசப் நிகஸ்டன் பீற்றஸ் மற்றும் களுவாஞ்சிகுடி மெதடிஸ்த திருச்சபை அருட்சகோதரர் எஸ்.யூஸ்காவுதா ஆகியோர் கலந்துகொண்டு ஆசிச்செய்தியினை வழங்கிவைத்தனர். இதன்போது கிறிஸ்தவ திருச்சபைகளின் மாணவ மாணவிகளினால் கரோல் கீதங்கள் இசைக்கப்பட்டதுடன் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிருவாக உத்தியோகத்தர், அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் சிறுவர் சிறுமிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர், இதன் போது கலை நிகழ்ச்சிகளை வழங்கிய மாணவ மாணவிகள் மற்றும் உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.