பல கொரோனா அலைகள் வரலாம் – மூத்த வைரலாஜிஸ்ட் எச்சரிக்கை

உலகம் முழுவதையும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் அச்சுறுத்திவருகிறது. 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வரை உலக நாடுகள் முழுவதையும் வாட்டிவதைத்துவருகிறது. ஒவ்வொரு அலை முடிவிலும் புதிய புதிய கொரோனா திரிபுகள் உருவாகி அழிவில்லாமல் இருந்துவருவது உலக மக்களை அச்சப்படுத்தியுள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்தும் விடை தெரியாமல் மருத்துவ உலகம் திணறிவருகிறது.

. இந்தியாவில் இதுவரை 1,270 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்து கொரோனா உறுதியானோரில் சுமார் 80 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் நம் வாழ்வின் ஒரு பகுதி என்று இப்போது நாம் கருத வேண்டும் என்று கூறியுள்ளார் மூத்த வைராலஜிஸ்ட் ககன்தீப் காங்.

இதுகுறித்து தெரிவித்த அவர், ‘நாம் கொரோனா மற்றும் அதன் பிறழ்வுகளுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். அவை தொடர்ந்து வெளிப்படும். இன்னும் பல அலைகள் வரலாம். ஆனால் அதிர்ஷ்டவசமாக, ஓமைக்ரான் மற்ற வகைகளைக் காட்டிலும் குறைவான தீவிரத்தன்மை கொண்டதாகத் தெரிகிறது. பொதுவாக கொரோனா நோய்த்தொற்றுகள் குழந்தைகளை கடுமையாக தாக்குவதில்லை என்பதால், நாம் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று நான் நம்புகிறேன். இந்தியாவில் எந்த தடுப்பூசியை பூஸ்டர் டோஸாகப் பயன்படுத்த வேண்டும் என்ற முடிவைத் தெரிவிப்பதற்கான தரவு மிகவும் குறைவாகவே உள்ளது” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.