இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தென் ஆப்ரிக்காவின் செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தனது முதல் இன்னிங்ஸில் 202 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல் ராகுல் 50 ரன்களும், அஸ்வின் 46 ரன்களும் எடுத்தனர்.

இதன்பின் முதல் இன்னிங்ஸை துவங்கிய தென் ஆப்ரிக்கா அணி 229 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்ரிக்கா அணியில் அதிகபட்சமாக பீட்டர்சன் 62 ரன்கள் எடுத்தார். இந்த்ஹிய அணி சார்பில் ஷர்துல் தாகூர் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணிக்கு ரஹானே 58 ரன்களும், புஜாரா 53 ரன்களும், இறுதி வரை போராடிய ஹனுமா விஹாரி 40* ரன்களும் எடுத்து கொடுத்தாலும் மற்ற பேட்ஸ்மேன்கள் சொல்லி கொள்ளும் அளவிற்கு ரன் குவிக்காததால் 266 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி, தென் ஆப்ரிக்கா அணியின் வெற்றிக்கு 240 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

இதனையடுத்து 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணிக்கு அந்த அணியின் கேப்டனும் துவக்க வீரருமான டீன் எல்கர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 96* ரன்கள் எடுத்த கொடுத்ததன் மூலமும், வாண்டர் டூசன் (40) மற்றும் மார்க்ரம் (31) ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தின் மூலமும் இலக்கை ஈசியாக எட்டிய தென் ஆப்ரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.