சிக்ஸர் கூட அடிக்காமல் நியூசிலாந்து ஒரே பந்தில் 7 ரன்,

வங்கதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. தற்போது இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. தொடரின் முதல் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி தற்போது ஹெக்லி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் வங்க தேச வீரர்கள் செய்த சிறிய தவறினால் நியூசிலாந்து அணி, ஒரே பந்தில் 7 ரன்களை எடுத்துள்ளது. சிக்ஸர் கூட அடிக்காமல் நியூசி அணி இந்த ரன்களை பெற்றுள்ளதுதான் இப்போது ஆச்சர்யமே..

கடந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற எபடாட் ஹுசைன் வீசிய ஓவரில் தான் இந்த சுவாரஸ்யம் நடைபெற்றுள்ளது. அந்த ஓவரின் ஐந்தாவது பந்தை எதிர்கொண்ட வில் யங்கின் பேட்டில் பட்டு எட்ஜ் ஆனது. ஆனால் ஸ்லிப் ஃபீல்டர்கள் அந்த கேட்ச் வாய்ப்பை தவறிவிட்டனர். பந்து பவுண்டரி லைனை நோக்கி நகர வங்கதேச ஃபீல்டர் ஒருவர் அதனை தடுத்தார்.

கீப்பர் எண்டுக்கு அவர் பந்தை த்ரோ செய்ய அதை பிடித்த பேக்-அப் ஃபீல்டர் மறுமுனையில் இருந்த ஸ்டம்பை தகர்க்க முயன்றார். ஆனால் அது ஸ்ட்ம்பை மிஸ் செய்ததோடு, பவுண்டரி லைனையும் கடந்திருந்தது. அதற்கு நியூசிலாந்து வீரர்கள் யங் மற்றும் லேதம் மூன்று ரன்களை எடுத்திருந்தனர். அந்த ஒவர்த்ரோவையும் சேர்த்து நடுவர் 7 ரன்கள் என சிக்னல் கொடுத்திருந்தார்.

நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 521 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. டாம் லாதம் இரட்டை சதமும், கன்வே சதமும் அடித்து இருந்தனர். வங்கதேச தனது முதல் இன்னிங்ஸில் அணி 126 ரன்களில் ஆல் அவுட்டானது. தற்போது 395 ரன்கள் வங்கதேச அணி இந்த ஆட்டத்தில் பின் தங்கியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.