வங்காளதேசத்தை பந்தாடி தொடரை சமன் செய்தது நியூசிலாந்து.

நியூசிலாந்து- வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச்சில் நேற்று முன்தினம் கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 521 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் டாம் லாதம் 252 ரன்களும், கான்வே 109 ரன்களும் குவித்தனர்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 126 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. அந்த அணியின் யாசிர் அலி (55), நுருல் ஹசன் (41) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்னை தொட்டனர். நியூசிலாந்து அணியில் டிரென்ட் பவுல்ட் அபாரமாக பந்து வீசி ஐந்து விக்கெட்டுகள் சாய்த்தார். அத்துடன் நேற்றைய 2-வது நாள் ஆட்டம் முடிவடைந்தது.

இன்று 3-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. பாலோ-ஆன் ஆன வங்காளதேச அணி தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்து கொண்டு இருந்தன. ஆனால் லிட்டோன் தாஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 102 ரன்னில் ஆட்டமிழந்தார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

கடைசி விக்கெட்டை ராஸ் டெய்லர் வீழ்த்த வங்காளதேசம் 278 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 117 ரன்னில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து 2 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன் செய்தது.

இரட்டை சதம் அடித்த டாம் லாதம் ஆட்ட நாயகன் விருதும், கான்வே தொடர் நாயகன் விருதும் வென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.