போகி பண்டிகை: உற்சாகமாக கொண்டாடும் பொதுமக்கள்

மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தியும், போகி மேளம் அடித்தும் போகி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

‘பழைய கழிதலும், புதியன புகுதலும்’ என்ற அடிப்படையில், புதுமையை வரவேற்கும் விதமாக போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாலையிலேயே பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி, பொதுமக்கள் போகிப் பண்டிகையை கொண்டாடினர்.

அதிகாலையிலேயே, பயனற்ற பழைய பொருட்களை எரித்த போது, போகி மேளம் அடித்து சிறுவர்கள் உற்சாகம் அடைந்தனர். ரப்பர் பொருட்கள், பழைய டயர் போன்ற சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை எரிக்க வேண்டாம் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக் கொண்டுள்ளதால், அந்த பொருட்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சேலம், ஈரோடு உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் போகி பண்டிகையை ‘காப்புக்கட்டு’ என்று கொண்டாடுவது வழக்கம்.

அதன்படி, வீட்டின் முற்றம், வைக்கோல் போர், உள்ளிட்ட பகுதிகளில் வேப்பிலை கொத்து, சிறுகண்பீலை பூ, ஆவாரம் பூ கொத்து ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து செறுகி வைத்து கொண்டாடி மகிழ்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.