ரயில் விபத்தில் 5 பேர் பலி: ரயில்வே அமைச்சருடன் பிரதமர் பேச்சு

மேற்கு வங்க ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

பிகானீர்-குவாஹட்டி விரைவு ரயில் மேற்கு வங்கத்தில் நேற்று (வியாழக்கிழமை) மாலை தடம்புரண்டது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர், 45 பேர் காயமடைந்துள்ளனர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

விபத்து குறித்து பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது:

“விபத்து பற்றி ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவிடம் பேசினேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்.”

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஆகியோரும் தெரிவித்துள்ளனர்.

ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் ரயில்வே வாரியத் தலைவர் விபத்து நடந்த இடத்துக்கு நேரில் விரைகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.