புலமைப் பரிசில் வகுப்புகள் 18 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை : நடந்தால் அறிவிக்கவும் (Update)

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களைத் தயார்ப்படுத்தும் பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளுக்கு எதிர்வரும் 18 ஆம் திகதி நள்ளிரவில் இருந்து பரீட்சை நிறைவடையும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களைத் தயார்ப்படுத்தும் பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளுக்கு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி நள்ளிரவில் இருந்து பரீட்சைகள் நிறைவடையும் வரை தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
குறித்த காலப்பகுதியில் மாதிரி வினாப்பத்திரங்களை அச்சிடுவதற்கும், விநியோகிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அத்துடன், உயர்தரப் பரீட்சை பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதியில் இருந்து மார்ச் மாதம் 5 ஆம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த தடை விதி முறைகளை மீறி எவரேனும் செயற்படுவாராயின் அது பற்றி அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ, பொலிஸ் தலைமையகத்திற்கோ, பரீட்சைகள் திணைக்களத்திற்கோ அறிவிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எம்.எல்.டி. தர்மசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது போன்ற சட்டவிரோத செயல்கள் நடந்தால், 0112421111 (காவல்துறை தலைமையகம்), 119 (காவல்துறை அவசர அழைப்பு எண்), 1911 (காவல் துறையின் அவசர தொலைபேசி எண்), 0112785211 அல்லது 0112785212 (தேர்வு ஆணையாளர் அலுவலகம்) ) எனத் தெரிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் பொதுமக்களைக் கோருகிறது

Leave A Reply

Your email address will not be published.