சு.க. உறுப்பினர்களின் வாய்களுக்குப் பூட்டுப் போட ‘மொட்டு’ கட்சியினர் முயற்சி!

“ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் வாய்களுக்குப் பூட்டுப் போடுவதற்கு ‘மொட்டு’ கட்சியினர் முயற்சிக்கின்றனர். ஆனாலும், உண்மைகளைக் கதைப்பதற்கு நாம் தயங்கமாட்டோம்.

இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

“ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பலமடைந்து வருகின்றது. கட்சியின் முக்கியத்துவத்தை மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், எமது வாய்களுக்குப் பூட்டுபோட்டு, சாவியை ‘மொட்டு’ கட்சி தலைமையகத்தில் வைப்பதற்கு சிலர் முற்படுகின்றனர். இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.

உண்மையை வெளிப்படையாகக் கதைப்போம். அநீதிகள் இடம்பெற்றால் அவற்றை சுட்டிக்காட்டுவோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.