நேபாளம் கொரோனா பாதிப்பில் புதிய உச்சம்.

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 10,258- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவத்தொடங்கியது முதல் அந்நாட்டில் ஏற்படும் அதிகபட்ச கொரோனா பாதிப்பு இதுவேயாகும்.

நேபாளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் அந்நாட்டில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11,624- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 39,044- ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 547- பேர் குணம் அடைந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.