காணாமல் போன பிரபல நடிகை சாக்குமூட்டையில் பிணமாக மீட்பு.

வங்காள தேசத்தில் பிரபல நடிகையாக இருந்தவர் ரைமா இஸ்லாம் ஷிமு (45). கடந்த 1998 முதல் திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய அவர், 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார், டி.வி நாடகங்களிலும் நடித்துள்ளார். பார்டமன் என்ற படத்தில் அறிமுகமானார். தயாரிப்பு பணியிலும் ஈடுபட்டிருந்தார். வங்காள தேச திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் இணை உறுப்பினராகவும் இருந்தார்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனார். இந்த நிலையில் ரைமா இஸ்லாம் ஷிமு, நேற்று முன்தினம் தலைநகர் டாக்காவின் புறநகரில் உள்ள கெரனிகஞ்ச் ஹஸ்ரத்பூர் பாலம் அருகே சாக்குமூட்டைக்குள் பிணமாக கண்டுடெக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

உள்ளூர்வாசிகள் சிலர் தகவல் கொடுத்ததை தொடர்ந்து, கெரனிகஞ்ச் மாடல் காவல் நிலையத்தின் குழு நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் நடிகையின் சடலத்தை மீட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

நடிகையின் உடலில் பல காயங்கள் இருந்ததாகவும், ரைமா இஸ்லாம் ஷிமு ஞாயிற்றுக்கிழமை கொல்லப்பட்டதாகவும், பின்னர் அவரது உடலை பாலத்தின் அருகே வீசப்பட்டதாகவும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

ரைமா இஸ்லாம் ஷிமுவின் மரணம் தொடர்பான விசாரணைக்காக அவரது கணவர் ஷகாவத் அலி நோபல் மற்றும் கார் டிரைவரை போலீசார் கைது விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரது கணவர் ஷகாவத் அலி நோபல் கொலை வழக்கில் தனக்கு தொடர்பு இருப்பதாக ஒப்புக்கொண்டார். தற்போது, அவர் 3 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.