ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதலை மேற்கொள்ளும் – அமெரிக்க ஜனாதிபதி.

இராணுவ தாக்குதலை மேற்கொண்டால் உடனடியாகவும்-குறுகிய கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் அதற்கான பெரும் விலையை செலுத்துவார்கள் ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதலை மேற்கொள்ளும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் தெரிவித்துள்ளார்.

மொஸ்கோ இதற்காக கடுமையான விலையை செலுத்தவேண்டியிருக்கும்என எச்சரித்துள்ள அவர் ஆனால்சிறிய ஊடுருவல் இடம்பெற்றால் எவ்வாறான நடவடிக்கையை எடுப்பது என்பது குறித்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மத்தியில் தெளிவான நிலைப்பாடு இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் மாநாட்டில் விளாடிமிர் புட்டினின் நோக்கம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள பைடன் தான் என்ன செய்யப்போகின்றார் என்பது குறித்து புட்டின் தெளிவாக உள்ளார் என நான் கருதவில்லை என தெரிவித்துள்ளார்.
புட்டின் உக்ரைனிற்குள் நுழைவார் என நான் நிச்சயமாக நம்புகின்றேன் அவர் எதனையாவது செய்தாகவேண்டிய நிலையில் உள்ளார் என பைடன் தெரிவித்துள்ளார்.

முழுமையான படையெடுப்பு என்பது இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் போர் மற்றும் சமாதானத்தின் அடிப்படையில் உலகில் இடம்பெற்ற மிக முக்கியமான விடயமாக அமையும் என பைடன் தெரிவித்துள்ளார்.
உக்ரைனிற்கு வெளியே அதன் விளைவுகள் காணப்படலாம் கட்டுக்கடங்காமல் போகலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
படையெடுப்பில் ரஷ்யா இராணுவ ரீதியாக வெற்றி பெறலாம் ஆனால் அந்த நாடு பாரிய இழப்புகளை சந்திக்கும் என பைடன் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிற்கு இது இராணுவ ரீதியில் இலகுவான விடயமாக இருக்காது என தெரிவித்துள்ள அவர் சமீபத்தில்அமெரிக்கா உக்ரைனிற்கு வழங்கியுள்ள இராணுவ உதவி குறித்து சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர்கள் இராணுவத் தாக்குதலை மேற்கொண்டால் உடனடியாகவும்-குறுகிய கால மற்றும் நீண்ட கால அடிப்படையிலும் அதற்கான பெரும் விலையை செலுத்துவார்கள் என பைடன் எச்சரித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.