துண்டு துண்டாக சிதறப்போகுது சீனா.. தாறுமாறாக எச்சரிக்கும் அந்நாட்டு ஆலோசகர்.!

இது தொடர்ந்தால், மக்களுக்கு கிடைக்க வேண்டிய பயன்களுக்கு தடைகல்லாக அமைந்து விடும். சோவியத் யூனியன் போல சீனாவும் இது சிதற வழி வகுத்து விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனப் பாதுகாப்பு என்ற பெயரில் அளவுக்கு அதிகமாக ராணுவத்துக்கு செலவு செய்தால் சோவியத் யூனியன்சு போல சீனாவும் சிதறிவிடும் என்று சீன வெளியுறவு கொள்கை ஆலோசகர் எச்சரித்துள்ளார்.

உலக வல்லரசாக வேண்டும் என்ற ஆசையில் உள்ளது சீனா. வல்லரசு நாடான அமெரிக்காவுக்கே சவால் விடும் வகையில் அதிரடி காட்டி வருகிறது. நாட்டுக்குள் உள்கட்டமைப்புகளை அதிரடியாக உருவாக்கி வரும் சீனா, உலக நாடுகள் பலவற்றையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளும் அளவுக்கு நிதி உதவிகளை அள்ளி கொடுத்து உதவி வருகிறது. அதே வேளையில் மற்ற நாடுகளையும் அண்டை நாடுகளையும் அச்சுறுத்தும் வகையில் ராணுவ பலத்தையும் பல மடங்கு அதிகரித்து வருகிறது. 209 பில்லியன் அமெரிக்க டாலரை 2021-இல் செலவிட்டதாக கூறப்படுகிறது.

ராணுவத்துக்கு செலவை தொடர்ந்து சீனா அதிகரித்து வரும் நிலையில், சீனாவின் சி.பி.பி.சி.சி. எனப்படும் அரசியல் ஆலோசனை உயர் மட்டக் கமிட்டி தலைவரான ஜியா குய்ங்குவா சர்வதேச பாதுகாப்பு ஆய்வு இதழில் கட்டுரை வெளியிட்டுள்ளார். அதில் சீனா பற்றி பல தகவல்களைக் கூறியுள்ளார். “சோவியத் யூனியன் தேச பாதுகாப்புக்காக அளவுக்கு அதிகமாக ராணுவத்துக்கு செலவு செய்தது. அதன் காரணமாக பொருளாதார வளர்ச்சியில் சோவியத் யூனியன் பின் தங்க நேர்ந்தது. அதனால், மக்களின் வாழ்க்கைத் தரமும் முன்னேறவில்லை. அதன் விளைவால், 1991-இல் சோவியத் யூனியன் மக்களின் செல்வாக்கை இழந்து தனித்தனி நாடுகளாக சிதறின.

கம்யூனிஸ்ட் நாடான சோவியத் யூனியனின் வீழ்ச்சி குறித்து சீன பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்பட்டது. தற்போது சோவிய யூனியன் நடைமுறையை சீனாவும் பின்பற்றி வருகிறது. சீனப் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. ராணுவ பலத்தை அளவுக்கு அதிகமாக அதிகரித்து வருவதால் செலவுகள் உயர்ந்து வருகின்றன. இது சீனாவில் விலைவாசி உயர்வுக்கு வழி வகுத்துள்ளது. இது தொடர்ந்தால், மக்களுக்கு கிடைக்க வேண்டிய பயன்களுக்கு தடைகல்லாக அமைந்து விடும். சோவியத் யூனியன்சு போல சீனாவும் இது சிதற வழி வகுத்து விடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.