உலகின் அதிக வயதான கொரில்லா உயிரிழப்பு…

உலகின் அதிக வயதான கொரில்லா ஓஸி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ,அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா உயிரியல் பூங்கா நிர்வாகம் ஒஸி உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது. பேரன், கொள்ளுப் பேரன் பல 4 தலைமுறைகளை கண்ட 61 வயதான ஒஸி உலகின் அதிக வயதான கொரில்லா என்ற சிறப்பை பெற்றிருந்தது.

மேலும் ,பிரேத பரிசோதனைக்கு பின்னர் ஒஸி இறப்புக்கான காரணம் தெரியவரும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பாதித்த நிலையில் அதிலிருந்து ஓஸி குணமடைந்தது.

Leave A Reply

Your email address will not be published.