உள்நாட்டு (நன்னீர்) மீன்பிடி விரிவாக்கம் தொடர்பான களவிஜயம்.

நன்னீர் மீன்பிடிச் செயற்பாடுகள் தொடர்பான விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு கிளிநொச்சி வலைப்பாடு பகுதிக்கு வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் அ.சிவபாலசுந்தரன், அமைச்சின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் இ.சுரேந்திரநாதன் ஆகியோர் களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டனர்.

இதன் போது அப்பகுதிகளில் உள்ள நன்னீர் நிலைகள் மற்றும் கடற்கரையை அண்டிய பிரதேசத்தின் தரைத்தோற்ற நிலை தொடர்பாக ஆராய்ந்ததுடன் அப்பகுதி மீனவர்களுடனும் கலந்துரையாடினார்கள்.

அங்கு கருத்துதெரிவித்த மீனவர்கள் ஏற்கனவே அப்பகுதியில் உள்ள நன்னீர் நிலைகளில் மீன்வளர்ப்பு மேற்கொள்வதற்காக NAQDA நிறுவனம் முயற்சி செய்த போதும் அது வெற்றியளிக்கவில்லை எனவும், தாங்கள் கடற்றொழிலையே விரும்பி மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டார்கள்.

மேலும் வலைப்பாட்டிற்கும் எருமைத்தீவுக்கும் இடைப்பட்ட ஆழம் குறைந்த கடல் பகுதியில் நடைபெறும் கடலட்டை வளர்ப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டதுடன் பெருமளவான முதலீட்டில் கடலட்டை வளர்க்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.