இலங்கை திரைப்படமான கோமாளிகள் (Video)

இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனத்தின் வர்த்தக சேவையில் வாரம் தோறும் ஒலிபரப்பான கோமாளிகள் கும்மாளம் வானோலி நாடகம் பின்னர் திரைப்படமானது.

எஸ்.ராமநாதன் இயக்கத்தில் 1976ஆம் ஆண்டு இலங்கையில் வெளிவந்த ஓர் ஈழத்துத் திரைப்படம் கோமாளிகள்.

இத்திரைப்படத்தில் எஸ். ராம்தாஸ், ரி. ராஜகோபால், எஸ். செல்வசேகரன், அப்துல் ஹமீட், கே. சந்திரசேகரன், சுப்புலட்சுமி காசிநாதன், ஆன்ந்தராணி பாலேந்திரா, சில்லையூர் செல்வராஜன், கமலினி செல்வராஜன், கே. ஏ. ஜவாஹர் ஆகியோர் நடித்துள்ளனர்.

சிங்களத் திரைப்படங்களில் பின்னணி பாடிய மொஹிதீன் பேக் முதன் முதலாக தமிழ்த் திரைப்படத்தில் பாடியது இத் திரைப்படத்தில் தான்.

Comments are closed.