கைதிகளை வீட்டுக்காவலில் வைக்க திட்டம்!

சிறிய குற்றங்களுக்காக கைதிகளை சிறையில் அடைக்காமல் வீட்டுக்காவலில் வைக்கும் முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து சிறைச்சாலைகள் திணைக்களம் கவனம் செலுத்தி வருகிறது.

சிறைச்சாலைகளில் கூட்ட நெரிசலைக் குறைப்பதும், அவர்களுக்காக அரசாங்கம் செலவிடும் பெரும் தொகையைச் சேமிப்பதும் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இந்த ஏற்பாட்டின் கீழ், வீட்டுக் காவலில் உள்ள நபர்கள் அங்கீகரிக்கப்பட்ட நடவடிக்கைகளுக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள்.

வேலை வாய்ப்புகள் மற்றும் சுகாதாரத் தேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய விடயங்களுக்கு மட்டுமே தங்கள் வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள். அவர்களின் பயணம் உள்ளிட்ட நடவடிக்கைகள் சிறை அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு, வீட்டுக் காவலில் உள்ளவர்களின் உடலில் எங்காவது ஒரு மின்னணு சாதனம் பொருத்தப்பட்டு, அத்தகைய கண்காணிப்பை எளிதாக்குகிறது.

சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஐந்தாண்டு சீர்திருத்த வேலைத்திட்டத்தின் கீழ் வீட்டுக் காவலில் வைக்கும் முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது.

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய, நீதியமைச்சர் அலி சப்ரியிடம் இந்த திட்ட முன்மொழிவை கையளித்ததாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள இடநெருக்கடிக்கு தீர்வாக சில நாடுகள் இம்முறையை நடைமுறைப்படுத்தி வருவதாக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்

Leave A Reply

Your email address will not be published.