ரஷ்யாவில் விமான விபத்து; 2 பேர் உயிரிழப்பு.

ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் கோரியாகி என்ற கிராமம் அருகே ஆன்-2 என்ற ஒற்றை இயந்திரம் கொண்ட விமானம் ஒன்று பறந்து சென்றபோது திடீரென விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தில் விமானம் கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில், விமானத்தில் இருந்த 2 பேர் உயிரிழந்து உள்ளனர் என கவர்னர் விளாடிமிர் சோலோடோவ் கூறியுள்ளார். இந்த விபத்து, ஓடுபாதையில் இருந்து ஒரு மைல் தொலைவில் ஏற்பட்டு உள்ளது.

இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி உடனடியாக தெரியவரவில்லை. இதுபற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.