எய்ட்ஸ் நோய்க்கான வைரசை கண்டறிந்த பிரபல விஞ்ஞானி காலமானார்.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வைரஸ் விஞ்ஞானி மற்றும் நோபல் பரிசு பெற்றவரான லக் மான்டேக்னீயர் பாரீஸ் புறநகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் காலமானார். அவருக்கு வயது 89. எய்ட்ஸ் எனப்படும் ஆள்கொல்லி நோயை ஏற்படுத்த கூடிய எச்.ஐ.வி. எனப்படும் வைரசை கண்டறிந்தவர்களில் லக் ஒருவர் ஆவார்.

கடந்த 2008ம் ஆண்டு பிரான்கோயிஸ் பர்ரே-சினோவ்சி மற்றும் ஹரால்டு ஜர் ஹாசன் ஆகியோருடன் அவர் மருத்துவ துறைக்கான நோபல் பரிசை பகிர்ந்து கொண்டார்.

லக் மற்றும் சினோவ்சி ஆகிய இருவரும் பாரீசில் உள்ள பாஸ்டீயர் மையத்தில் ஒன்றாக ஆய்வு மேற்கொண்டனர். இதில், 1980ம் ஆண்டுகளில் மர்ம நோய் என அறியப்பட்ட எய்ட்ஸ் நோய்க்கு தீர்வு காண்பதற்கான முயற்சியில் ஈடுபட்டதில், எச்.ஐ.வி. எனப்படும் வைரசே, இந்த நோய்க்கு காரணம் என கண்டறியப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.