அபிவிருத்தி நிதியின் மூலமான உபகரணங்கள் வழங்கி வைத்தல் நிகழ்வு.

வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக்கொடை நிதியின் கீழ் (PSDG – 2021) வடக்கு மாகாணத்தில் செயற்படும் நன்னீர் மீன்பிடிச் சங்கங்களுக்கான உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வு இன்று (15.02.2022) முற்பகல் 9.30 மணியளவில் மாங்குளத்திலுள்ள வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தில் நடைபெற்றது.

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் அ.சிவபாலசுந்தரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் கௌரவ கே.என்.டக்ளஸ் தேவானந்தா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உதவித்திட்டங்களை வழங்கிவைத்தார்.

குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கு.திலீபன், வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் வை.தவநாதன் மற்றும் வடக்கு மாகாண விவசாய அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.