50 ஆண்டுகளுக்கு பிறகு கனடாவில் அவசர நிலை பிரகடனம்..!

லாரி ஓட்டுநர்களின் போராட்டத்தை அடுத்து கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு பிறகு கனடாவில் நாடு முழுவதும் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ,லாரி ஓட்டுநர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற கனடா அரசின் உத்தரவை எதிர்த்து நடைபெற்று வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக கனடா – அமெரிக்காவை இணைக்கும் முக்கிய பாலமான தி அம்பாசிடர் பாலம் முடக்கப்பட்டது.

அந்தநிலையில் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக நாடு முழுவதும் அவசர நிலையை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். இதன் மூலம் போராட்டக்காரர்களை உடனடியாக கைது செய்யவும், லாரிகளை பறிமுதல் செய்யவும் பொலிஸாருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கனடாவில் 1970ம் ஆண்டுக்கு பிறகு அவசர நிலை அமலுக்கு வந்துள்ளது.

மேலும் போராட்டம் ஒன்றுக்காக கனடாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டபோதும் நிலைமையை கட்டுப்படுத்த இதுவரை ராணுவம் களமிறக்கபப்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.