சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் உக்ரைன் அழகி.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் தற்போது முதன்முறையாக நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கிறார்.

அவரின் 20வது படமாக உருவாகும் இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் கேவி இயக்குகிறார்.
இந்த படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் தயாராகி வருகிறது. தமன் இசையமைத்து வருகிறார்.

இப்பட படப்பிடிப்பு காரைக்குடியில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டை சேர்ந்த மாடல் மற்றும் நடிகை மரியா ரியாபோஸப்கா என்பவர் நடிக்கிறாராம்.

இந்தியாவிற்கு டூர் வரும் ஓர் அழகான பெண்ணுடன் சிவகார்த்திகேயனுக்கு ஏற்படும் ரொமான்ஸ்தான் இப்படத்தின் கதைக்களம் என சொல்லப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.