இந்தியா- இலங்கை கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை மாற்றம்.

இந்திய அணி சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக விளையாடி வருகிறது. இந்தத் தொடர் முடிந்த உடன் இலங்கைக்கு எதிராக இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.

முன்னதாக இத்தொடரின் முதல் டெஸ்ட்போட்டி பெங்களூருவில் பிப்ரவரி 25ஆம் தேதி முதல் மார்ச் 1ஆம் தேதி வரையும், 2ஆவது டெஸ்ட் மொகாலியில் மார்ச் 5ஆம் தேதியில் இருந்து மார்ச் 9ஆம் தேதி வரையியலும் நடைபெறுகிறது.

அதன்பின் மார்ச் 13 முதல் மார்ச் 18ஆம் தேதி வரையில் மூன்று டி20 போட்டிகளும் அடைபெறும் வகையில் ஏற்கனவே போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் டெஸ்ட் போட்டிக்கு முன் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி டி20 தொடரானது பிப்ரவரி 24ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையிலும், முதல் டெஸ்ட் போட்டி மார்ச் 4ஆம் தேதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி மார்ச் 12ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.