முள்ளிவாய்க்கால் கிழக்கில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் மக்களிடம் கையளிப்பு!

இலங்கை கடற்படையின் தொழில்நுட்பம் மற்றும் மனிதவள பங்களிப்புடன் சுகாதார போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் 1.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவகர் பிரிவில் நிர்மானிக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் நேற்று(22) மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த குடிநீர் திட்டத்தின் கட்டடத்தினை முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்கள் நாடாவை வெட்டி திறந்து வைக்க, குடிதண்ணீர் திட்டத்தின் பெயர் பலகையினை கோத்தபாய கடற்படை முகாமின் கட்டளையிடும் அதிகாரி A.A.N பண்டா அவர்கள் திரைநீக்கம் செய்துவைக்க, தொடர்ந்து குடி நீர்இயந்திரத்தின் ஆழியினை அழுத்தி குடிநீர் திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளனர்.

கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் குடிதண்ணீர் பிரச்சினையினால் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இத் திட்டமூடாக கிராமத்தில் உள்ள மக்களின் குடிநீர் பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் குறித்த திட்டத்திற்காக கிராம மக்கள் தமது நன்றிகளையும் தெரிவித்துள்ளார்கள்.

இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கோத்தபாய கடற்படை முகாமின் கட்டளையிடும் அதிகாரி A.A.N பண்டா உள்ளிட்ட கடற்படை அதிகாரிகள், கரைதுறைப்பற்று பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர், கிராம மட்ட உத்தியோகத்தர்கள், மதகுரு, சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.