போரை நிறுத்து! ஆக்கிரமிப்புக்கு எதிராக ரஷ்யர்கள் வீதியில்….தொடரும் கைதுகள் (Video)

உக்ரைனில் தாக்குதல்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை நிறுத்தக் கோரி ரஷ்ய மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள பல பிரபலமான நபர்கள் இந்த போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்கின்றனர்.

இவர்களில் ஏராளமான நடிகர், நடிகைகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் போராட்டக்காரர்களை கலைக்க ரஷ்ய அரசு அந்நாட்டு பாதுகாப்பு படையினருக்கு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, ஆர்ப்பாட்டங்களில் இருந்து கிட்டத்தட்ட 2,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.