யுக்ரேன் மீதான ரஷ்ய தாக்குதல்: ஐ.நா தீர்மானத்துக்கு ஆதரவாக 141 நாடுகள் ஆதரவு, இந்தியா உள்பட 35 நாடுகள் புறக்கணிப்பு

யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பை கைவிட்டு தமது படைகளை ரஷ்யா திரும்பப் பெற வலியுறுத்தும் ஐ.நா தீர்மானத்துக்கு ஆதரவாக மொத்தமுள்ள 193 நாடுகளில் 141 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன. இந்தியா, சீனா, இலங்கை, பாகிஸ்தான் உள்பட 35 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளன.

யுக்ரேனில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கை குறித்து ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோதி தொலைபேசியில் பேசியுள்ளதாக இந்திய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

யுக்ரேனின் மரியூபோல் நகரில் ரஷ்யா நடத்திய இடைவிடாத தாக்குதல்களால் நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

அமெரிக்க வான் பரப்பில் ரஷ்ய விமானங்கள் விரைவில் தடை செய்யப்படும் என்று பிபிசியின் அமெரிக்க செய்தி சேகரிப்பு இணை நிறுவனமான சிபிஎஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

யுக்ரேன் தலைநகர் கீயவுக்கு மேற்கில் உள்ள ஜைட்டோமைர் நகரின் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாக யுக்ரேன் அரசு அவசரகால சேவை கூறுகிறது.

யுக்ரேனின் கெர்சன் நகரில் சண்டை நடந்துகொண்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் அந்நகர மேயர்.
ஐரோப்பிய விமான நிறுவனமான விஸ் ஏர் (Wizz Air), யுக்ரேனிய அகதிகளுக்கு, அவர்களின் குறுகிய தூர விமானங்களில் 1,00,000 பேருக்கு இலவச இருக்கைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.

கார்கிவ் மற்றும் கிழக்கு யுக்ரேனின் பிற பகுதிகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் விஷயத்தில் நாங்கள் இந்திய அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம் என்று இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் உள்ள ஆரம்பப் பள்ளிக் குழந்தைகள், யுக்ரேனிய தூதரகத்தில் பூக்களை வைத்ததற்காகவும், ” போர் வேண்டாம்” என்று பதாதைகள் வைத்திருந்ததற்காகவும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக அறிக்கைகள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

யுக்ரேன் மீதான ரஷ்யத் தாக்குதலின்போது அடிக்கடி பேசப்படும் பெயர்களுள் ஒன்று அலெக்ஸாண்டர் லூகஷென்கோ. ரஷ்யாவின் நட்பு நாடுகளுள் ஒன்றான பெலாரூஸின் அதிபர் இவர்.

யுக்ரேன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதல் குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், யுக்ரேன் மீது படையெடுத்தால் மேற்கு நாடுகள் எப்படி எதிர்வினையாற்றும் என்பது குறித்து புதின், தவறாக கணக்குப் போட்டுவிட்டார் என தெரிவித்தார்.

கார்கிவ் மற்றும் கிழக்கு யுக்ரேனின் பிற பகுதிகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் விஷயத்தில் நாங்கள் இந்திய அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம் என்று இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோஃப் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.