07 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பித்தல் தொடர்பான சுற்றுநிருபம் வெளியானது.

மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவது தொடர்பான சுற்றுநிறுபம் 2022.03.04 இன்று கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்ற விடயங்கள் வருமாறு

2021 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சையின் பின்னர் நாட்டின் அனைத்து அரசு மற்றும் தனியார் பாடசாலைகள் 2022.03 07 அன்று ஆரம்பமாகின்றது.

இவ்வாறு பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் கீழே குறிப்பிடுகின்ற அடிப்படையில் மாணவர்கள் பகுதி பகுதியாக பாடசாலைக்கு அழைக்கப்பட வேண்டும்.

அத்துடன் பாடசாலைக்கு அழைக்கப்படாதவர்களுக்காக மாற்றீட்டு முறைகளின் அடிப்படையில் குறித்த பாடத் தொகுதிகள் கற்பிக்கின்ற நடவடிக்கைகள் நடைபெற வேண்டும்.

1 முதல் 20 வரையான மாணவர்களைக் கொண்ட வகுப்புக்கள் எல்லா நாட்களிலும் மாணவர்கள் அழைக்கப்பட வேண்டும்.

21 முதல் 40 வரையான மாணவர்கள் கொண்ட வகுப்புகளின் மாணவர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் பாடசாலைக்கு அழைக்கப்பட வேண்டும்.

41 க்கு மேற்பட்ட மாணவர்களை கொண்ட வகுப்புகளில் மாணவர்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வகுப்புக்கள் நடத்தப்படவேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.