மாத்தறை தங்கத் தீவுக்கு புதிய பாலம்…

மாத்தறை கடற்கரைப் பூங்காவை ஒட்டியுள்ள தங்கத் தீவுக்குச் செல்வதற்கு (புறாத் தீவு) புதிய பாலம் ஒன்றை நிர்மாணிக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ நேற்று (04) பிற்பகல் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யு.ஆர். பேமசிறிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தங்கத் தீவுக்குப் பிரவேசிப்பதற்கான பாலம் நீண்ட நாட்களாக பழுதடைந்த நிலையில் இருந்தது. நேற்று, காலை பாலம் இடிந்து வீழ்ந்ததன் காரணமாக அந்த தீவுக்குச் செல்ல முடியாதுள்ளதாக சங்கைக்குரிய ஓமாரே கஸ்ஸப தேரர் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.

சியம் மஹா நிகாயாவின் ரோஹண தரப்பின் உபோஸதாகாரய வளாகம் அமைந்துள்ள இந்தத் தீவு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த ஒரு இடமாகும். அரச அபிவிருத்தி மற்றும் வடிவமைப்புக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் (05) குறித்த இடத்திற்குச் சென்று நிர்மாணப் பணிகளை பார்வையிட உள்ளதாகவும், பாலத்தின் நிர்மாணப் பணிகளை 06 மாதங்களுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.