அம்மாவை நானே கொலை செய்தேன் : 16 வயது சிறுவன் வாக்குமூலம்

அம்மாவின் கழுத்தை நானே நெரித்து கொலை செய்தேன் என 16 வயது சிறுவன் பொலிஸ் விசாரணைகளில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை வீடொன்றில் இருந்து சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது.

தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த ஹெனடிக் ஜஸ்மின் (வயது 37) எனும் பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் தனது இரு பிள்ளைகளுடன் வசித்து வந்த நிலையில் அவரது கணவன் வெளிநாட்டில் வசித்து வருகின்றார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் தாயும் மகனும் மட்டுமே இருந்துள்ளனர்.

மறுநாள் பெண் உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

பெண்ணின் மகனான 16 வயதுடைய சிறுவன் வீட்டில் இருந்து காணாமல் போயிருந்ததுடன், வீட்டின் சுவர்களில் இரத்த கறைகளும் காணப்பட்டன.

அது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த வேளை காணாமல் போன 16 வயது சிறுவனை நேற்றைய தினம் பொலிஸார் கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட சிறுவனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், தானே தாயின் கழுத்தை காலால் நெரித்து கொலை செய்தேன் என வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுவனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் சிறுவனை முற்படுத்தியதை அடுத்து, அச்சுவேலியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சிறுவன் சேர்க்கப்பட்டுள்ளான்.

உயிரிழந்த பெண்ணின் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு மேலதிக பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை , சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என அயலவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுவன் கைபேசி விளையாட்டுக்களுக்கு (மொபைல் கேம்ஸ்) அடிமையானவர் எனவும் , அதனால் சிறுவன் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்தார் என கடந்த 05ஆம் திகதி பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்திகள்

இராவணன் மீண்டும் எழுவானா? – (உபுல் ஜோசப் பெர்னாண்டோ)

ஜனாதிபதித் தேர்தலில் அனைத்து வேட்பாளர்களையும் எதிர்கொள்ள நான் தயார்! – சஜித் சூளுரை.

யாழ். தெல்லிப்பழை பெண் மரணம்: தலைமறைவான மகன் இன்று கைது!

சாவகச்சேரி வைத்தியசாலையில் மேல்நிலை அதிகாரியைத் தாக்கிய தாதி கைது!

மஹரகம வடிகாலில் ஒரு தொகை கடவுச்சீட்டுகள்.

இந்தோ பசிபிக் பிராந்திய இயக்குனருக்கும் NPP தலைவருக்கும் இடையே சந்திப்பு!

போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட ஹமாஸ் : எகிப்து மற்றும் கத்தாரில் இருந்து போர் நிறுத்த முன்மொழிவு.

இந்த எதிர்ப்புக் கோசம் எந்த இலவசக் கல்வி பற்றியது ? – குசல் பெரேரா

ராஃபாவிலிருந்து பாலஸ்தீனர்களை வெளியேற்றும் இஸ்ரேல்.

சிங்கப்பூர், இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் கூட்டு கியூஆர் குறியீட்டுக் கட்டண முறையைத் தொடங்க ஜப்பான் இலக்கு.

சிறைபிடிக்கப்பட்ட இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான்.

தமிழகக் காவல்துறை இணையத்தளத்தை முடக்கிய இணைய ஊடுருவல்காரர்கள்.

சாதி வெறி தாக்குதலுக்கு உள்ளான மாணவன் +2 தேர்வில் சாதனை.

அல்ஜசீரா இஸ்ரேல் அலுவலகத்தில் சோதனை.

ஓட்டு போட்டால் மசால் தோசை இலவசம்!!! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கர்நாடகா ஹோட்டல்

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய இளைஞருக்கு எதிராகச் சட்டம் பாயும்.

நான் ஜனாதிபதியானவுடன் தமிழர்களுக்குத் தீர்வு! – சஜித் சத்தியம்.

பொன்சேகாவுக்கு எதிரான சஜித் அணியின் மனு மே 21 ஆம் திகதி விசாரணைக்கு!

பாதாள உலகக் குழு மன்னா ரமேஷ் துபாயிலிருந்து கொழும்புக்கு..

E-Visa அமைப்பு பற்றி VFS Global வெளியிட்டுள்ள அறிவிப்பு

காதலியை தேடிச் சென்ற இளைஞன் , சடலமாக காட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தேர்வு காரணமாக மனச்சோர்வடைய வேண்டாம் – 1926 எண்ணிற்கு அழைக்கவும்.

கரந்தெனிய PHI கொலைச் சந்தேக நபர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்ற போது கைது!

Leave A Reply

Your email address will not be published.