அஸ்வினுக்கு ,கபில் தேவ் பாராட்டு.

இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெற்றது. இதில் இலங்கை அணி வீரர் சரித் அசலாங்கா 20 ரன்கள் எடுத்திருந்த போது அஸ்வின் பந்துவீச்சில் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 435 விக்கெட்கள் கைப்பற்றிய அஸ்வின், கபில் தேவின் சாதனையை முறியடித்து ,இந்திய அணியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

அனில் கும்ப்ளே 619 விக்கெட்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.அவருக்கு அடுத்த இடத்தில் அஸ்வின் உள்ளார்.

இந்நிலையில், அஸ்வினுக்கு கபில்தேவ் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

இந்திய அணியில் சமீப காலமாக அஸ்வினுக்கு சரியான முறையில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இருப்பினும் அவர் மிகப் பெரிய சாதனை படைத்துள்ளார்.

அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் பல ஆண்டுகளாக என்னிடம் இருந்த 2வது இடத்தை அஸ்வின் பிடித்தது மகிழ்ச்சியாக உள்ளது.

அஸ்வின் புத்தசாலித்தனமான பந்து வீச்சாளர். அடுத்து அவர் 500 விக்கெட் என்ற இலக்கை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். இதனை அடைய முயற்சி செய்து கட்டாயம் சாதிப்பார் என உறுதியாக நம்புகிறேன். ஒருவேளை அதையும் தாண்டி அஸ்வின் அசத்தலாம் என தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.