McDonald’s, Coca-Cola உள்ளிட்ட சில நிறுவனங்களை ரஷ்யாவில் நிறுத்த நடிவடிக்கை

McDonald’s, Coca-Cola, Starbucks ஆகிய அமெரிக்க நிறுவனங்களை ரஷ்யாவில் நிறுத்தவுள்ளது குறித்துத் தகவல் வெளிவந்துள்ளன.

உக்ரேனில் மக்களுக்கு நிலவும் தேவையற்ற துயரத்தைப் புறக்கணிக்கமுடியவில்லை என்று McDonald’s நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவிலுள்ள அதன் 850 உணவகங்களில் 62,000 பேர் பணிபுரிகின்றனர்.

PepsiCo நிறுவனமும், அதன் பான விற்பனையைக் கட்டுப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

ரஷ்யாவின் ஒளிபரப்புப் பங்காளித்துவ நிறுவனத்துடனான ஒப்பந்தத்தைத் தற்காலிகமாக ரத்துசெய்யவுள்ளதாக Premier League தெரிவித்துள்ளது.

Shell நிறுவனம், ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தவுள்ளது.

தளவாட சிக்கல்களால், ரஷ்யாவில் அதன் கார் உற்பத்தியை நிறுத்தவுள்ளதாக ஜப்பானின் Nissan நிறுவனம் தெரிவித்ததுள்ளது.

உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடரும் வேளையில், மாஸ்கோவுடனான தொடர்புகளைத் துண்டிக்க வர்த்தகங்களுக்கும் விளையாட்டு அமைப்புகளுக்கும் நெருக்குதல் அதிகரித்துள்ளது.

ரஷ்யாவில் பெருமளவில் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்களில் சுமார் 290, அந்நாட்டிலிருந்து விலகவுள்ளதாய் அறிவித்துள்ளதாக Yale பல்கலைக்கழகம் கூறியுள்ளது.

– AFP

Leave A Reply

Your email address will not be published.