பாண் உட்பட பேக்கரி பண்டங்களின் விலைகளை நள்ளிரவு முதல் அதிகரிக்கத் தீர்மானம் !!

மாவு நிறுவனங்கள், ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை இன்று முதல் உயர்த்தியதன் காரணமாக, பாணின் விலை உட்பட அனைத்து பேக்கரி பண்டங்களின் விலைகளையும் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன கூறினார்.

மாவு வழங்கும் பிரதான நிறுவனங்கள் இன்று முதல் விலையை கிலோவுக்கு 38 ரூபாவால் அதிகரித்துள்ளன. இதனால் பேக்கரி பொருட்களின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் அனைத்துப் பொருட்களின் விலைகளும் கடுமையாக அதிகரிக்கப்படும்.

எனவே, இன்று இரவு முதல் பாண் உட்பட அனைத்து பேக்கரி பண்டங்களின் விலைகளையும் அதிகரிக்க சங்கம் தீர்மானித்துள்ளது என்றார்.

இதன்படி,பாண்(450கிராம்)ஒன்றின் விலை 20 ரூபா முதல் 30 ரூபாவுக்கிடையிலும் பணிஸ் ஒன்றின் விலை 10 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.