கேரளாவில் இடம்பெற்ற மண்சரிவில் 43 பேர் பலி

இந்தியாவின் கேரள மாநிலத்தில் இடம்பெற்ற மண்சரிவினால் 43 பேர் உயிரிழந்தனர்.

கேரள மாநிலத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக தேயிலை தோட்டம் ஒன்றிலேயே இந்த மண்சரிவு அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

தோட்ட தொழிலாளர்கள் ஆழ்ந்த நித்திரையில் இருந்த போதே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இந்த அனர்த்தத்தில் இது வரை 43 பேர் உயிரிழந்துள்ள அதேவேளை மேலும் பலர் மண்ணில் புதையுண்டிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

கேரள மாநிலத்தில் தொடர்ந்தும் பலத்த மழை பெய்யலாம் என அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Comments are closed.