ஒரு இளைஞனின் காதல் தேடல்…

இந்தப் படத்தில், டி.வி. நடிகர் அசார் கதாநாயகனாகவும், மனிஷா ஜித் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். யோகி பாபு, மன்சூர் அலிகான், செந்தில் ஆகிய மூன்று பேரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி.ராபின்சன் தயாரித்து இருக்கிறார்.

படத்தைப் பற்றி டைரக்டர் ஆனந்த்ராஜன் கூறியதாவது:

“ஒரு இளைஞனின் காதல் தேடலாக, இன்றைய இளைஞர்களை கவரும் வகையில், திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. தன்னுடைய பரம்பரை சாபத்தை போக்க போராடும் கதாநாயகன், காதலித்துதான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறான். இந்த நிலையில், கதாநாயகன் மறக்க முடியாத அளவுக்கு ஒரு சிக்கலில் மாட்டுகிறான். அதில் இருந்து அவன் மீண்டானா, இல்லையா? என்பதே கதை.”

Leave A Reply

Your email address will not be published.