சீன அதிபருடன் ஜோ பைடன் பேசியது என்ன?

பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் உக்ரைன் மீது ரஷியா ராணுவத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் உக்ரைனின் பல நகரங்கள் உருக்குலைந்துவிட்டன. இந்த விவகாரத்தில் ரஷியாவுக்கு ஆதரவாக சீனா செயல்பட்டு வருவதாக உலக நாடுகள் விமா்சனம் செய்து வருகின்றன.

இந்நிலையில், சீன அதிபா் ஜி ஜின்பிங்குடன் அமெரிக்க அதிபா் ஜோ பைடன் காணொலி வழியாக பேசினாா்.

இரு வல்லரசு நாட்டுத் தலைவா்களின் இந்தப் பேச்சு சா்வதேச அளவில் பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியது.

இந்தப் பேச்சுவாா்த்தை குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தைவான் மீதான அமெரிக்காவின் கொள்கை மாறவில்லை என்றும், தற்போதைய நிலையில் ஒருதலைப்பட்சமான மாற்றங்களைத் தொடர்ந்து எதிர்ப்பதாகவும் அதிபர் ஜோ பைடன் மீண்டும் வலியுறுத்தினார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ரஷியாவின் #உக்ரைன் மீதான படையெடுப்பு, ரஷியா மீதான பொருளாதார (தடைகள்) மீது கவனம் செலுத்தினர். சீனா ரஷியாவிற்கு பொருளாதாரத்திற்கான ஆதரவை வழங்கினால் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து அதிபர் விவரித்தார், மேலும் நெருக்கடிக்கு இராஜதந்திர அளவில் தீர்வு காணுமாறு வலியுறுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.