தமிழ் பெண்ணை கரம்பிடித்தார் மேக்ஸ்வெல்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல், தமிழ் பெண்ணான வினி ராமன் ஆகியோரது திருமணம் இன்று நடைபெற்ற நிலையில், அவர்களைது திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல். அதிரடி பேட்டிங், அருமையான ஸ்பின் பவுலிங் என சிறந்த ஆல்ரவுண்டராக திகழும் மேக்ஸ்வெல், ஆஸ்திரேலிய அணியின் மேட்ச் வின்னராக வலம்வருகிறார்.

மேலும் ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக ஆடும் கிளென் மேக்ஸ்வெல், கடந்த சீசனில் அபாரமாக விளையாடியதையடுத்து, அவரை ரூ.11 கோடிக்கு தக்கவைத்தது ஆர்சிபி அணி.

சமகாலத்தின் அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவரான கிளென் மேக்ஸ்வெல், தமிழத்தை சேர்ந்த ஆஸ்திரேலியாவில் வளர்ந்த வினி ராமன் என்ற பெண்ணை காதலித்துவந்த நிலையில், இவர்களுக்கு இந்திய முறைப்படி 2020ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது.

அதன்பின்னர் கரோனா அச்சுறுத்தல், ஊரடங்கு என நெருக்கடியான நிலை தொடர்ந்ததால் திருமணம் செய்யாமல் இருந்தனர். இந்நிலையில், அவர்கள் இருவருக்கும் இம்மாதம் 27 ஆம் தேதி திருமணம் முடிவாகி இருந்தது.

இந்நிலையில் கிளென் மேக்ஸ்வேல் – வினி ராமன் ஆகியோரது திருமணம் நடைபெற்றுள்ளது. இதனை இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

இவர்களது பதிவு வைரலான நிலையில், இந்த தம்பதிக்கு ஆர்சிபி உள்பட, பல்வேறு கிரிக்கெட் பிரபலங்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.